காதலித்து திருமணம் செய்துகொண்ட இருவேறு சமூகத்தைச் சேர்ந்த புதுமண தம்பதி மணக்கோலத்தில் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
நாகை மாவட்டம் மஞ்சக்கொள்ளை பகுதியைச் சேர்ந்த ஹரிஹர சுதன் என்பவர், சிக்கல் பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர்களது காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால், நாகையில் இன்று இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதையடுத்து மணக்கோலத்தில் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த புதுமண தம்பதிகள் போலீசாரிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். நாகையில் பாதுகாப்பு கேட்டு புதுமண தம்பதி மணக்கோலத்தில் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.