தமிழ்நாடு

நடுக்குப்பத்தில் ஓரிரு நாளில் 100 கடைகள் ஒப்படைக்கப்படும்: அதிகாரிகள்

webteam

மெரினா போராட்டத்தின் இறுதியில் ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் நடுக்குப்பத்தில் தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ‌ஓரிரு நாளில் 100 கடைகள் அமைக்கப்பட்டு ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‌நடுக்குப்பத்தில் மீன் மார்க்கெட் முற்றிலும் எரிந்து நாசமான நிலையில் அங்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ‌கடைகள் அமைப்பதற்கு தேவையான இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ‌சில நாட்களில் கடைகள் அமைக்கப்பட்டு ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தின் இறுதியில் ஏற்பட்ட வன்முறையால் நடுக்குப்பம் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த பகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ‌தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.