தமிழ்நாடு

கனிம வளங்கள் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கடத்தப்படுவதாக கூறி நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்

கனிம வளங்கள் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கடத்தப்படுவதாக கூறி நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்

JustinDurai
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாகக்கூறி கன்னியாகுமரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கனிம வளங்கள் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள மலைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது. இல்லை என்றால் குழித்துறையில் உள்ள தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவின் வீட்டின் முன் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிட்லர் தெரிவித்துள்ளார்.