தண்டவாளத்தில் கற்களை வைத்த மர்ம நபர்கள் pt
தமிழ்நாடு

சென்னை | தண்டவாள கிராஸிங்கில் ஜல்லி கற்கள்.. ரயிலை கவிழுக்க சதியா? போலீசார் விசாரணை!

சென்னை அம்பத்தூர் பட்டதைபாக்கம் ரயில் தண்டவாளத்தில் கிராஸிங் பகுதியில் ஜல்லி கற்களை வைத்துச்சென்ற மர்ம நபர்களால் போலீஸார் விசாரணை.

PT WEB

நேற்றிரவு அம்பத்தூர் பட்டர்வாக்கம் இடையே தண்டவாள சிக்னல் முறையாக வேலை செய்யாததால், அதற்கு முன்னால் இருந்த சிக்னலில் ரயில் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே கட்டுப்பாட்டு அறையின் ஊழியர்கள் தண்டவாளத்தில் பிரச்சினை ஏற்பட்ட பகுதியில் நேரில் ஆய்வு செய்தனர்.

ஜல்லி கற்களை வைத்துச்சென்ற நபர்கள்..

நேரில் சென்று ஆய்வுசெய்தபோது தண்டவாளத்தில் கிராஸிங் பகுதியில் ஜல்லிக்கற்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை அப்புறப்படுத்தி பெரம்பூர் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தண்டவாளத்திற்கு நடுவே கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதியா என்ற கோணத்திலும் பெரம்பூர் ரயில்வே போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.