தமிழ்நாடு

நான் மயிலாப்பூரில்தான் இருக்கிறேன்: எம்எல்ஏ நட்ராஜ்

நான் மயிலாப்பூரில்தான் இருக்கிறேன்: எம்எல்ஏ நட்ராஜ்

webteam

நான் மயிலாப்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில்தான் இருக்கிறேன் என்று எம்எல்ஏ நட்ராஜ் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் நான் நியாயமாக நடக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். மக்களுக்காக சேவையாற்றுவதை நிறுத்தப் போவதில்லை. மக்களுக்கு சேவை செய்ய ஜெயலலிதா அளித்த பரிசுதான் இந்த எம்எல்ஏ பதவி என அவர் அந்தப் பதிவில் எழுதியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் மக்கள் சேவைக்கே முதலிடம் தருவேன். என்னை யார் வேண்டுமானாலும் வந்து சந்திக்கலாம் எனவும் அவர் முகநூலில் கூறியுள்ளார்.