தமிழ்நாடு

சுற்றுலா பயணிகள் வாகனத்தை விரட்டிய காட்டு யானை

சுற்றுலா பயணிகள் வாகனத்தை விரட்டிய காட்டு யானை

webteam


முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள பந்திபூர் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லும் வாகனத்தை யானை விரட்டும் காட்சி வெளியாகியுள்ளது. 

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய சீகூர் வனப்பகுதிக்குள் ரோந்து சென்ற வாகனத்தை காட்டு யானை ஒன்று விரட்டிய காட்சி கடந்த வாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில் அது வனத்துறை வாகனம் இல்லை என்றும், சட்டவிரோதமாக வனப்பகுதிக்குள் சென்ற ஜீப்பை காட்டு யானை துரத்தியது என பின்னர் தான் தெரியவந்தது. அந்த பகுதிகளில் சட்டவிரோதமாக தனியார் வாகனங்கள் வனப்பகுதிக்குள் செல்வதே இதற்கு காரணமாக சொல்லப்பட்டது.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் முடிவதற்குள், முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள கர்நாடக மாநிலம் பந்திபூர் புலிகள் காப்பகத்தில் இதேபோல ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்த முறை சுற்றுலா பயணிகளை வனப்பகுதிக்குள் அழைத்து சென்ற வனத்துறை வாகனத்தை காட்டு யானை ஒன்று விரட்டிய சம்பவம் நடந்துள்ளது. வனப்பகுதிக்குள் வாகனம் சென்ற வழியில் நின்று கொண்டிருந்த ஒற்றை யானையை நிறுத்தி பார்த்துள்ளனர். அப்போது கோபமடைந்த அந்த ஒற்றை யானை தடீரென வனத்துறை வாகனத்தை துரத்த ஆரம்பித்துள்ளது. நீண்ட நேரம் ஜீப்பை துரத்திய அந்த யானை பின்னர் தானாக பின் வாங்கியுள்ளது. ஓட்டுனரின் சாமர்த்தியம் காரணமாக அந்த வாகனத்தில் பயணித்த சுற்றுலா பயணிகள் தப்பியுள்ளனர்.