தமிழ்நாடு

பசும்பொன்னில் இன்று தேவர் குருபூஜை விழா

பசும்பொன்னில் இன்று தேவர் குருபூஜை விழா

webteam

பசும்பொன்னில் இன்று நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர்  குரு பூஜை விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் விழாவில் கலந்துகொள்கின்றனர். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களும் குருபூஜை விழாவில் பங்கேற்று முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த உள்ளனர். குருபூஜை விழாவின்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 300 சிசிடிவி கேமராக்களும் கண்காணிப்பு பணிக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதில் பழைய குற்றவாளிகளை உடனுக்குடன் கண்டறியும் 8 ஃபேஸ் டிடெக்டிவ் வகை கேமராக்களும் பயன்படுத்தப்படுகின்றன.