தமிழ்நாடு

உங்கள் வீட்டில் ஏசி இருக்கிறதா? - இதையெல்லாம் செய்யாதீர்கள்..!

webteam

ஏசியை வீடுகளில் பயன்படுத்துவோர் அவற்றை அடிக்கடி பராமரிப்பது அவசியம் எனக்கூறும் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஏசி பயன்படுத்தும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

இதன்படி, ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்ற முறையான ஸ்டேபிலைசேர் பயன்படுத்த வேண்டும். குளிர் காலத்தில் பெரிதாக பயன்படுத்தாத ஏ.சி யை, சர்வீஸ் செய்த பிறகே பயன்படுத்த வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஏசியை சர்வீஸ் செய்தல் வேண்டும். அதிக மின்சார வாட்ஸ் தாங்கக்கூடிய தரமான பிளக், சுவிட்ச், கேபிள் ஆகியவை பயன்படுத்த வேண்டும். ஏசி கருவியை அவ்வப்போது பரிசோதிப்பது அவசியம். அறையின் அளவிற்கு ஏற்ற செயல் திறன் கொண்ட ஏ.சி யை பயன்படுத்துதல் வேண்டும். குறிப்பாக 100 சதுர அடிக்கு 1 டன், அதற்கு மேல் ஒன்றரை டன், பெரிய அறைக்கு 2 டன் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட ஏ.சி பயன்படுத்த வேண்டும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

அதேபோல, விலை குறைந்த மலிவான தரமற்ற ஸ்டேபிலைசேர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பல நாட்களாக செயல்படாமல் இருந்த ஏ.சியை அப்படியே உபயோகிப்பது கூடாது. சர்வீஸ் செய்யாமல் இயக்குதல் கூடாது. உயர் மின் அழுத்தத்தை தாங்க முடியாத கேபிள், சுவிட்ச் ஆகியவற்றை பயன் படுத்துதல் கூடாது. பழுது ஏற்படும் போது மட்டுமே பரிசோதிப்பது சரியல்ல. பெரிய அறைக்கு, குறைந்த செயல் திறன் கொண்ட ஏ.சியை பயன்படுத்துதல் கூடாது என்றும் வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஏசி பராமரிப்பு: செய்ய வேண்டியவை என்ன?

1 ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்ற முறையான ஸ்டெப்லைசர் பயன்படுத்த வேண்டும்

2 குளிர்காலத்தில் பெரிதாக பயன்படுத்தாத ஏ.சி.யை, சர்வீஸ் செய்த பிறகே பயன்படுத்த வேண்டும்

3 மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஏசியை சர்வீஸ் செய்தல் வேண்டும்

4 அதிக மின்சார வாட்ஸ் தாங்கக்கூடிய தரமான பிளக், சுவிட்ச், கேபிள் ஆகியவை பயன்படுத்த வேண்டும்

5 ஏசி கருவியை அவ்வப்போது பரிசோதிப்பது அவசியம்.

6 அறையின் அளவிற்கு ஏற்ற செயல் திறன் கொண்ட ஏ.சி யை பயன்படுத்துதல் வேண்டும்.

ஏசி பயன்பாட்டில் செய்ய கூடாதவை:

1 விலை குறைந்த மலிவான தரமற்ற ஸ்டெப்லைசர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்

2 பல நாட்களாக செயல்படாமல் இருந்த ஏ.சியை அப்படியே உபயோகிப்பது கூடாது

3 சர்வீஸ் செய்யாமல் இயக்குதல் கூடாது

4 உயர் மின் அழுத்தத்தை தாங்க முடியாத கேபிள், சுவிட்ச் ஆகியவற்றை பயன் படுத்துதல் கூடாது

5 பழுது ஏற்படும் போது மட்டுமே பரிசோதிப்பது சரியல்ல.

6 பெரிய அறைக்கு, குறைந்த செயல் திறன் கொண்ட ஏ.சியை பயன்படுத்துதல் கூடாது ஏசி பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை.‌