தமிழ்நாடு

'நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான்' : முரசொலி

webteam

திருமாலின் 4 நிலைகளை போல திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பணியாற்றியதாக, முரசொலி நாளிதழில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத்தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பெரும்பாலான இடங்களில்‌ திமுக அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது.  திமுக கூட்டணி 38 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. திமுகவின் இந்த வெற்றியின் மூலம் தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் முரசொலி நாளிதழில் திருமாலின் 4 நிலைகளை போல திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பணியாற்றியதாக தலையங்கத்தில் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் தமிழகத்தில் திமுகவிற்கு கிடைத்த வெற்றிக்கு மு.க.ஸ்டாலினின் உழைப்பே காரணம் எனக்குறிப்பிட்டு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என வைணவப் பெருமக்கள் திருமாலின் நான்கு நிலைகளைச் சொல்வதைப் போலவே ஸ்டாலின் தேர்தல் பணியாற்றினார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.‌ மேலும், தனித்த வெற்றியை திமுக பெற்றிருப்பதன் மூலம் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்பதாகவும், அதற்கு மு.க.ஸ்டாலினே காரணம் என்றும் முரசொலி தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.