தமிழ்நாடு

அரசியல் கட்சிகளின் பேனர்களை அகற்ற தயக்கம் காட்டும் நகராட்சி

Rasus

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் பெரியகுளம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அதிமுக, திமுகவினரின் பேனர்களை அகற்றுவதில் நகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தள்ளது.

பேனர்கள் மற்றும், 'பிளக்ஸ்' போர்டுகளில் உயிரோடு இருப்பவர்களின் படங்கள் இடம்பெறக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் பெரியகுளம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அதிமுக, திமுகவினரின் பேனர்களை அகற்றுவதில் நகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தள்ளது. வரும் 5-ஆம் தேதி தேனியில் நடக்க உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி மற்றும் தேனி செல்லும் சாலையில் அதிமுகவினர் சாலைகள் முழுவதும் பேனர்களை வைத்துள்ளனர். இதில் ஒரு சில இடங்களில் திமுக பிரமுகரின் திருமண விழா பேனர்களும் இடம்பெற்றுள்ளன. நீதிமன்ற உத்தரவையடுத்து தேனி நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள பேனர்கள் நகராட்சி நிர்வாகத்தாலும் காவல்துறையினராலும் அகற்றப்பட்ட நிலையில் பெரியகுளம் பகுதியில் வைக்கப்பட்ட அதிமுக, திமுக பேனர்களை மட்டும் அகற்ற நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. உயர்நீதிமன்றத்தின உத்தரவை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.