சென்னை மாநகர பேருந்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. நிலமை சீராகும் வரை பேருந்துகள் இயங்காது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னையில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை கைவிட வேண்டும் போலீசார் கேட்டுகொண்டனர். அதையேற்று மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த சிலர் கலைந்து சென்றனர். சிலர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை கைவிட மறுத்தனர். காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் சென்னையில் பல பகுதிகளில் சாலைமறியல், வாகன எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றது. இதன் காரணமாக சென்னையில் மாநகர பேருந்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. நிலைமை சீராகி இயல்பு நிலை திரும்பும் வரை பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.