chennai airport web
தமிழ்நாடு

சென்னையில் விமானச் சேவை ரத்து.. சிரமத்தைச் சந்திக்கும் விமானப் பயணிகள்!

எரிபொருள் விலை ஏற்றம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு, சர்வதேச சேவைகள் குறைப்பினால் டிக்கெட் தட்டுப்பாடு, தாமதம் காரணமாக பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

PT WEB

விமான எரிபொருள் விலை உயர்வைக் காரணம் காட்டி, சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சேவைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. சில சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் சேவைகளைக் குறைத்துள்ளதால் அந்தமான், திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கும், சிங்கப்பூர் , துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் செல்லும் பயணிகள் டிக்கெட் கிடைக்காமலும், விமான தாமதங்களாலும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஏர் இந்தியா

சென்னை விமான நிலையம் முழுமையாகப் புறக்கணிக்கப்படுவதாகப் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில், பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், ஆகஸ்ட் மாதத்திற்குப் பின் நிலைமை சீராகும் என்றும் ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.