தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு: கேரள அரசின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - தமிழக அரசு பதில் மனு

kaleelrahman

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உரிய முன்னெச்சரிக்கை இல்லாமல் நீர் திறக்கப்படுகிறது என்பது ஆதாரமற்றது கேரள அரசின் குற்றச்சாட்டுக்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த அனைத்து வழக்குகளும் நாளை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வரவிருக்கிறது.

இதையொட்டி உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு பதில் மனுவை தாக்கல் செய்திருக்கிறது. அந்த மனுவில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முன்னறிவிப்பின்றி நீர் திறக்கப்படுகிறது என்ற கேரள அரசின் குற்றச்சாட்டு நியாயமற்றது, ஒரு நாள் முழுவதும் 12 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டது என்பது உண்மை தன்மையற்றது.

ஏனெனில் 2 மணி நேரம் மட்டுமே 12 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டது, இதன்பின்னர் நீர் திறப்பு குறைக்கப்பட்டது. அதேபோன்று நீர் திறப்பால் பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்ததாக கேரள கூறும் குற்றச்சாட்டு மற்றும் புகைப்படங்களும் உண்மை தன்மை அற்றவை.

கேரள பகுதிகளில் நீர் செல்லும் பாதை பராமரிக்காமல் விட்டதால் நீர் செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது, எனவே அது கேரள அரசின் குறைபாடு எனக் கூறப்பட்டுள்ளது.