முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைகளை ஒட்டிய பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததால் குடிநீர் தேவை அதிகமாகியுள்ளது. அதனால், குமுளி மலையின் இரைச்சல்பாலம் வழியே 225 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 111.50 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 336 கன அடியில் இருந்து விநாடிக்கு 219 கன அடியாக குறைந்துள்ளது.