தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு அணை இன்று திறப்பு

முல்லைப்பெரியாறு அணை இன்று திறப்பு

webteam

தேனி மாவட்டத்தின் இரண்டாம் போக பாசனத்திற்காக இன்று நடைபெறும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் இரண்டாம் போக பாசனத்திற்காக இன்று நீர் திறக்கப்படவுள்ளது. இதற்காக அணையின் தேக்கடி மதகுப் பகுதியில் நடக்கும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்கிறார். அத்துடன் தேனி மாவட்ட ஆட்சியர் வெங்கடாச்சலம், தேனி மக்களவை உறுப்பினர் பார்த்திபன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். கடந்த சில வாரங்களாக கேரள எல்லைப்பகுதியில் பெய்த கனமழையால், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 127 அடியை தாண்டியுள்ளது. எனவே தொடர்ந்து 120 நாட்களுக்கு நீரை திறக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.