முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அடர் வனங்களுக்குள் பெய்யும் மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று ஆயிரத்து 3 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று விநாடிக்கு ஆயிரத்து 692 கன அடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
அணையின் நீர்மட்டம் 122 புள்ளி 80 அடியாகவும், நீர் இருப்பு 3 ஆயிரத்து 182 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. பாசனம் மற்றும் குடிநீருக்காக ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.