தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

webteam

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான குமுளி, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலையிலிருந்து தொடர்ந்து கனமழை பெய்தது. அதனால்‌ அணைக்கு நீ‌ர்வரத்து வினாடிக்கு 243 கன அடியிலிருந்து 701 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து அணையின் நீர்மட்டமும் ஒரு புள்ளி உயர்ந்து 121.60 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது பாசனம் மற்றும் குடிநீருக்காக 467 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.