தமிழ்நாடு

''கலைஞர் விருது கொடுக்கப்படாதது ஏன்?'' - ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்த எம்பி ரவிக்குமார்

''கலைஞர் விருது கொடுக்கப்படாதது ஏன்?'' - ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்த எம்பி ரவிக்குமார்

webteam

கலைஞர் விருது கொடுக்கப்படாதது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்துள்ளதாக எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2004ல் மத்திய அரசின் செம்மொழி பட்டியலில் தமிழ் மொழி வெளியிடப்பட்டது. பின்னர் மத்திய அரசு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் உருவாக்கப்பட்டது. இதன் கீழ், கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளையின் சார்பில் ஒரு விருது உருவாக்கப்பட்டது. இந்த விருது கடந்த 10 வருடங்களாக வழங்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கலைஞர் விருது கொடுக்கப்படாதது ஏன் என நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்துள்ளதாக எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரவிக்குமார், ‘செம்மொழி நிறுவனத்தில் கலைஞர் பெயரிலான விருது கொடுக்கப்படாதது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் தீர்மானத்தின் புகைப்படத்தையும் அவர் இணைத்துள்ளார்.