தமிழ்நாடு

ஆளுநருடன் எம்.பி மைத்ரேயன் திடீர் சந்திப்பு

Rasus

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வரும் நிலையில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.பி.யான மைத்ரேயன் ஆளுநரை சந்தித்து பேசி வருகிறார்.

அதிமுக பொதுச் செயலாளரான சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்திய நாளில் இருந்தே முன்னாள், இந்நாள் எம்எல்ஏ-க்கள், எம்.பி.க்கள் பலரும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதுவரை 10 எம்.பி.க்கள் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் ஆதரவு எம்.பி.யான மைத்ரேயன் சுமார் 5 மணியளவில் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் பேசி வருகிறார்.

பெரும்பான்மை எம்எல்ஏ-க்கள் ஆதரவு இருந்தும் ஆட்சியமைக்க அழைக்காமல் காலம் கடத்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கை என ஆளுநர் மீது சசிகலா நேற்று குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் இன்று, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.பி.யான மைத்ரேயன் ஆளுநரை சந்தித்து பேசி வருகிறார்.