தமிழ்நாடு

“வடமாநில தொழிலாளர்கள் வராவிட்டால் பல தொழில்கள் நலிந்துவிடும்”- கார்த்தி சிதம்பரம் எம்.பி.

webteam

“ஆன்லைன் சூதாட்டத்தை முற்றிலுமாக தடை செய்வது கேள்விக்குறி தான்? பண பரிமாற்றத்தில் வேண்டுமானால் கட்டுப்பாடு விதிக்கலாம்” என எம்.பி. கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாரளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வடமாநில தொழிலாளர்கள் குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “இந்திய குடிமக்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் குடியேறலாம். நிரந்தரமாக குடியிருக்கும் மாநிலத்தில் வாக்குகள் செலுத்தும் உரிமை அவர்களுக்கு உண்டு. வெளிமாநில தொழிலாளர்கள் வராவிட்டால் தமிழகத்தில் பல தொழில்கள் நலிந்துவிடும். பரோட்டா கூட கிடைக்காது”

பின் அரசியல் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், “இரட்டை இலை சின்னம் இருக்கும் வரை அதிமுக உயிரோட்டமாக இருக்கும். ஆனால், அக்கட்சி பாஜக நிழலில் இல்லாமல் செயல்பட்டால் எதிர்காலம் உண்டு. 

ஆன்லைன் சூதாட்டத்தை பொறுத்தவரை, அதை முற்றிலுமாக தடை செய்வது கேள்விக்குறி தான். பண பரிமாற்றத்தில் கட்டுப்பாடு விதிக்கலாம்” என்றார்.