தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழலில் திமுகவால் தான் நிலையான ஆட்சி கொடுக்க முடியும் என அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, அ.தி.மு.க. குழப்பமான கட்சியாக திகழ்கிறது. முதல்வரை நியமிக்க ஆளுநர் ஏன் தாமதபடுத்துகிறார் என்ற விளக்கத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும். அதிமுகவில் நிகழும் குழப்பங்களை பார்த்து மக்கள், திமுக ஆட்சி தான் வேண்டும் என எண்ணுகிறார்கள். தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைப்பது குறித்து தமிழக ஆளுநர் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.