MP Kanimozhi
MP Kanimozhi pt desk
தமிழ்நாடு

கனமழை மீட்பு நடவடிக்கை: டெல்லியில் இருந்து அவசரமாக தூத்துக்குடி வந்த எம்.பி. கனிமொழி!

webteam

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு சிக்கியுள்ள மக்களை மீட்கும் பேரிடர் மீட்புக் குழுவினர் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.

MP Kanomizhi

நெல்லையில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பி தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதன் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், எம்பி கனிமொழி டெல்லியில் இருந்து தூத்துக்குடிக்கு அவரசமாக இன்று காலை வந்தடைந்தார். இதையடுத்து மழைநீர் தேங்கியுள்ள தூத்துக்குடி நெடுஞ்சாலை பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார். அமைச்சர் உதயநிதி இன்று மாலை நெல்லைக்கு செல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.