ஆதரவு யாரும் இல்லாமல் வறுமையில் வாடியதால் தனது பார்வையற்ற 13 வயது மகனை கொன்ற தாய் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஆலந்தூர் அடுத்த பரங்கிமலை இந்திரா நகரைச் சேர்ந்த பத்மா என்பவர் கணவனை பிரிந்து தனது பார்வையற்ற 13 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பத்மாவிற்கு ஆதரவாக இருந்த அவரது தாயாரும் இறந்துவிட்டதால், ஆதரவில்லாமல் தனிமையில் விரக்தியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் மகனின் முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடி, தனது துப்பட்டாவல் கழுத்தை நெறுக்கி கொலை செய்துவிட்டு , தானும் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது கயிறு அறுந்து கீழே விழுந்ததால் தனது மனதை மாற்றிக்கொண்டு மகனையும் காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.
சிறுவனை சோதித்த மருத்துவர்கள் அவன் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். மகன் உயிரிழப்பு குறித்து பத்மாவிடம் நடத்திய விசாரணையில், மகனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். பரங்கிமலை காவல்த்துறை பத்மா மீது கொலை வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.