தமிழ்நாடு

குட்டி யானையை காப்பாற்ற போராடும் தாய் யானை

குட்டி யானையை காப்பாற்ற போராடும் தாய் யானை

webteam

சத்தியமங்கலம் அருகே குட்டி யானையை காப்பாற்ற தாய் யானை முயற்சித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் காக்கரை குட்டை வனப்பகுதியை ஒட்டியுள்ள ஈஸ்வரன் என்பரது தோட்டத்திற்கு உணவு தேடி மூன்றரை வயது
குட்டி யானையுடன் தாய் யானை வந்துள்ளது. அப்போது, குட்டி யானை திடீரென மயங்கி விழுந்ததால் அதனை காப்பாற்ற தாய்
யானை முயற்சித்தது. இதையடுத்து கிராம மக்கள், வனத்துறை மூலம் குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். ஆனால்,
தாய் யானை, குட்டிக்கு அருகிலேயே சுற்றி வருவதால் சிகிச்சை அளிக்க முடியமால் வனத்துறையினர் தொடர்முயற்சியில்
ஈடுபட்டனர். இந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சிய அடையச்செய்தது.