Pt Headlilnes Pt web
தமிழ்நாடு

Headlines| திமுகவில் இன்று முதல் வேட்பாளர் நேர்காணல் to நெதன்யாகுவின் புதிய வீடியோ வெளியீடு!

புதிய தலைமுறையின் இன்றைய காலைத் தலைப்புச் செய்திகளானது திமுகவில் இன்று முதல் வேட்பாளர் நேர்காணல் முதல் நெதன்யாகுவின் புதிய வீடியோ வெளியீடு வரை விவரிக்கிறது.

PT WEB

திமுகவில் இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை வேட்பாளர் நேர்காணல்... விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்துகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்...

குழப்பம் விளைவிப்போரின் சதியை முறியடித்து பலமான கூட்டணி அமைத்திருக்கிறோம்... 234 தொகுதிகளிலும் தாமே வேட்பாளர் என நினைத்து பணியாற்ற வேண்டும் என திமுக மாவட்டச் செயலர்களுக்கு மு. க.ஸ்டாலின் அறிவுறுத்தல்....

தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு... திட்டமிட்டபடி இன்று மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் என அறிவிப்பு...

தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் எப்படியும் தவெகவைக் கொண்டுவர முற்படும் பாஜக… கூட்டணியில் விஜய்; விடாது பாஜக என்று சொல்லும் டெல்லி தகவல்கள்...

விஜய், நயினார் நாகேந்திரன்

கூட்டணிக்குப் பிடிகொடுக்காத விஜய்… அடுத்த நிலை தலைவர்கள் வழியே காய் நகர்த்தும் பாஜக…

கூட்டணியாட்சி கிடையாது; குறைந்தது அதிமுக 150 தொகுதிகளில் போட்டி… நிலைப்பாட்டில் உறுதி காட்டும் எடப்பாடி பழனிசாமி

கூட்டணிக்குள் தவெகவைக் கொண்டுவர வேலுமணி வழியே காய் நகர்த்தும் பாஜக… பழனிசாமிக்கு வேலுமணி வழியே அழுத்தம் கொடுக்க திட்டம் எனத் தகவல்...

அடுத்தடுத்த நாட்களில் எதுவும் நடக்கலாம் என்று சொல்லும் டெல்லி வட்டாரங்கள்… அதிமுக, தவெகவுக்குள்ளேயே பெரிய விவாதங்கள் உருவாகலாம் என்றும் தகவல்...

திருச்செங்கோடு தொகுதியில் தவெக நிர்வாகி அருண்ராஜ் படத்துடன் பரிசுப் பொருள்கள்... வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பொருள்களை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்...

கரூரில் விஜய் பங்கேற்ற பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த சம்பவம்... விசாரணைக்காக டெல்லியில் இன்று சிபிஐ முன் ஆஜராகிறார் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி...

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்... திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு....

வேட்பாளர்கள் ஆன்லைனிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு... தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அரசியல் கட்சியினர் பரப்புரை செய்ய அனுமதி...

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026

மறைந்த தலைவர்களின் சிலைகளை மூடக் கூடாது... தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக கோரிக்கை...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஃபார்முலாவை கரூரிலும் அமல்படுத்துகிறது திமுக.... பட்டிகளில் மக்களை அடைத்துவைப்பதாக புகைப்படத்தைக் காட்டி அதிமுக எம்பி இன்பதுரை புகார்...

தோல்வி பயத்தில் பேசத் தொடங்கிவிட்டது அதிமுக... வாக்காளர்களை அடைத்துவைப்பது தொடர்பான அதிமுகவின் புகாருக்கு திமுகவின் ஆர்.எஸ்.பாரதி பதில்...

கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்... தேர்தல் ஆணையம் நடவடிக்கை...

உசிலம்பட்டியில் மகளின் திருமணத்துக்கு வந்து சென்ற தம்பதியின் காரில் 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்... அம்பாசமுத்திரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றதாக வாழைக்காய் வியாபாரியிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் பறிமுதல்...

2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிப்பு... தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் புத்தகத்துக்காக அங்கீகாரம்...

ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் ஆலங்கட்டி மழை... வெப்பம் தணிந்ததால் குளிர்ச்சியான சூழல்...

தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை... கூடலூரில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் தணிந்தது வெப்பம்...

தங்கம் விலை

தங்கம் விலை நேற்று சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 17ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை.. கடந்த 5 நாட்களில் சவரனுக்கு 3 ஆயிரத்து 280 ரூபாய் குறைந்தது...

வெள்ளி விலை கிலோவுக்கு 4ஆயிரம் ரூபாய் குறைந்தது.. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 276 ரூபாய்க்கு விற்பனை..

கேரளத்தில் சூடுபிடிக்கும் சட்டமன்றத் தேர்தல் களம்... ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்ந்து முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக...

மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலையொட்டி 144 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக... கடந்த முறை மம்தா பானர்ஜி வெற்றி பெற்ற பாபனிபூர் தொகுதியில் சுவேந்து அதிகாரி போட்டி...

மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்ளிட்ட 8 எதிர்க்கட்சி எம்பிக்களின் இடைநீக்கம் ரத்து... சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடந்த அனைத்து கட்சிகளின் மக்களவை குழு தலைவர்கள் கூட்டத்தில் முடிவு...

பிஹாரில் மொத்தமுள்ள 5 மாநிலங்களவை இடங்களையும் கைப்பற்றியது தேசிய ஜனநாயக கூட்டணி... முதல்வர் நிதிஷ் குமார், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்டோர் வெற்றி...

ஒடிசாவில் 3 மாநிலங்களவை இடங்களை கைப்பற்றிய பாஜக... ஒரு இடத்தை கைப்பற்றியது பிஜூ ஜனதா தளம்...

புதுச்சேரி, அசாமில் தொடங்கியது வேட்புமனுத் தாக்கல்... முதல்நாளில் புதுச்சேரியில் ஒருவர் கூட மனு தாக்கல் செய்யவில்லை...

ஸ்ரீதேவி

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சொத்து தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்துவரும் விசாரணைக்கு இடைக்கால தடை... சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றச்சாட்டு... வணிக சிலிண்டர் விலை கள்ளச்சந்தையில் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் விமர்சனம்...

முன்னாள் பிரதமர் தேவகவுடா காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு கடிதம்...

ஈரானின் ஹோர்மூஸ் நீரிணையை கடந்து குஜராத் வந்தது இந்தியாவின் சிவாலிக் கப்பல்... 45 ஆயிரம் மெட்ரிக் டன் எல்பிஜியுடன் வந்த நிலையில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு சீராகும் என எதிர்பார்ப்பு...

மத்திய இஸ்ரேல் பகுதிகள் மீது ஈரான் படைகள் மீண்டும் தாக்குதல்... ஜெருசலேம், பெய்த் ஷெமேஷ் உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் கட்டடங்கள் சேதம்...

இஸ்ரேல் மக்களுடன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ கலந்துரையாடுவது போன்ற காட்சிகள் வைரல்... ஏஐயால் உருவாக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் புதிய வீடியோ வெளியீடு...

ஐக்கிய அரபு அமீரகத்தில் 19 இந்தியர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்... மேற்காசிய போர் தொடர்பாக அவதூறு வீடியோக்களை பரப்பிய குற்றச்சாட்டில் நடவடிக்கை...

இலங்கையில் வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே வேலை நாள்களாக அறிவிப்பு... எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் நடவடிக்கை...

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மோதல்

மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு... பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என பாகிஸ்தான் மறுப்பு...

டெலிகிராம் செயலிக்கு 4 லட்சத்து 32 ஆயிரம் டாலர் அபராதம் விதித்த ரஷ்யா... தடை செய்யப்பட்ட உள்ளடக்கத்தை நீக்க தவறியதால் நடவடிக்கை...

புதிய வசதிகளுடன் MAX 2 AIRPODS-களை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்... இந்தியாவில் 67 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை...

சூர்யா நடித்து வரும் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படத்தின் டீசர் வெளியீடு... தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் படம் ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு தகவல்...

ஆண்களை மட்டுமே இதய நோய் பாதிக்கும் என பெண்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தல்... பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு அறிகுறிகள் ஆண்களைவிட முற்றிலும் மாறுபட்ட விதத்தில் அமையக்கூடும் என எச்சரிக்கை...