Pt Headlines Pt web
தமிழ்நாடு

HEADLINES | நியூசிலாந்திற்கு எதிராக டி20 தொடரை வென்ற இந்தியா முதல் விஜயை தாக்கும் அதிமுக வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, நியூசிலாந்திற்கு எதிரான தொடரை வென்ற இந்தியா முதல் விஜயை தாக்கும் அதிமுக வரை விவரிக்கிறது.

PT WEB

குடியரசு தினவிழாவையொட்டி பாதுகாப்பு வளையத்திற்குள் தலைநகர் டெல்லி... செங்கோட்டையை சுற்றி 4ஆயிரம் கட்டடங்கள் மீது கண்காணிப்பு வீரர்கள் நிறுத்தம்...

குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை... மோதல்கள் நிறைந்த உலகில் இந்தியா அமைதியை பரப்புவதாக பெருமிதம்..

5 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளை அறிவித்தது மத்திய அரசு... கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு அங்கீகாரம்...

தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் கள்ளிப்பட்டி ராமசாமிக்கு பத்ம பூஷண்... சமூக சேவைக்காக ஈரோட்டைச் சேர்ந்த மயிலானந்தனுக்கும் விருது அறிவிப்பு...

பத்ம பூஷன் விருது

தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிப்பு... சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடிக்கும் பத்ம ஸ்ரீ...

இந்திய பொருட்கள் என்றாலே உயர்தரமானவை என்ற எண்ணம் உலகெங்கும் உருவாக வேண்டும்... மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் உற்பத்தியாளர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்...

தேர்தல் சீசன் வந்தாலே பிரதமர் மோடியின் வடைகள் வந்துவிடும் என முதல்வர் விமர்சனம்... தமிழ்நாட்டு மக்கள் தந்த தோல்விகள் மறந்துவிட்டதா என்றும் கேள்வி...

வாழ்க்கை முழுக்க கால்களையே பார்த்திருக்கும் அடிமைகளுக்கு சூரியன் எப்படி தெரியும்? அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு...

கால் பங்கு வாக்குறுதிகளைக்கூட திமுக நிறைவேற்றவில்லை என எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு... திமுகவுக்கு இதுதான் இறுதி தேர்தல், இனி எப்போதும் திமுக ஆட்சிக்கு வராது எனவும் பேட்டி...

எந்த சதி, அழுத்தத்துக்கும் அடிபணிய மாட்டேன்... அழுத்தத்துக்கு எல்லாம் அடங்கிப் போகும் ஆள் அல்ல என நிர்வாகிகள் மத்தியில் தவெக தலைவர் விஜய் பேச்சு...

திமுக, அதிமுக இரண்டையும் கடுமையாக சாடிய விஜய்... தீய சக்தி, ஊழல் அடிமை சக்தி ஆட்சிக்கு வரக் கூடாது என்று பேச்சு...

வருமானத்தைப் பெருக்க அதிகார மையத்திடம் மண்டியிடுவதும் ஊழல்தான்... ஊழல் அடிமை கட்சி என விஜய் விமர்சித்திருந்த நிலையில் அதிமுக கடும் தாக்கு...

விஜய், எடப்பாடி பழனிசாமி

அடுத்தடுத்து விலகும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்... விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன்...

பணி நிரந்தரம் கோரி சென்னையில் காந்தி மண்டபம் முன்பு சிறப்பு பயிற்றுநர் ஆசிரியர்கள் போராட்டம்... சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல்துறையினர்...

காற்று மாசுவால் ஆரோக்கியம், பொருளாதாரத்தின் மூலம் பெரும் விலையை கொடுக்கிறோம்... குழந்தைகள், முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வேதனை...

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை... பல்லாவரம், பொழிச்சலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை...

காஷ்மீரில் நாளுக்கு நாள் தீவிரமடையும் பனிப்பொழிவு... ஸ்ரீநகர், ஜம்மு தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து 3ஆவது நாளாக மூடல்...

அமெரிக்காவின் பெரும் பகுதியை உறைய வைத்துள்ள பனிப்புயல்... கோடிக்கணக்கானோரின் இயல்பு வாழ்க்கை முடக்கம்...

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி... தொடரை கைப்பற்றி அசத்தல்...