Pt Headlines Pt web
தமிழ்நாடு

Headlines | திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மன்னிப்பு கோரிய ஆட்சியர் TO புலம்பெயர்ந்தோர் மெகா சர்வே!

புதிய தலைமுறையின் இன்றைய காலைத் தலைப்புச் செய்திகளானது, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மன்னிப்பு கோரிய ஆட்சியர் முதல் புலம்பெயர்ந்தோர் மெகா சர்வே வரை விவரிக்கிறது..

PT WEB

மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என கணிப்பு... கிருஷ்ணகிரி உட்பட 6 மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்படும் எனவும் வானிலை மையம் தகவல்...

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் மதுரை ஆட்சியர்... மதக்கலவரம் ஏற்படும் சூழல் இருந்ததாக தகவல் வந்ததாலேயே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் விளக்கம்...

எந்த வகையில் மத வன்முறையை தூண்டலாம் என்பதே பாஜகவின் நோக்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்... தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசுக்கு சாமரம் வீசும் அடிமையாக உள்ளது அதிமுக இருப்பதாகவும் காட்டம்...

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தேனி, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்... அதிமுக ஆட்சி அமைய தேர்தல் பணியாற்ற வேண்டும் என பழனிசாமி அறிவுறுத்தல்...

தவெக தலைவர் விஜய்

அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு என திருக்குறள் பாணியில் விஜய் விமர்சனம்... திமுக, பாஜக, தவெக என தமிழகத்தில் மும்முனை போட்டிதான் என்றும் விஜய் பேச்சு...

திமுகவை திட்டுவது மட்டுமே விஜய்யின் கொள்கை என டிகேஎஸ் இளங்கோவன் பதிலடி... விஜய் படத்தின் டிக்கெட் ப்ளாக்கில் விற்கப்படுவது ஊழல் இல்லையா? என்றும் கேள்வி...

தவெக 3ஆம் ஆண்டு தொடக்க விழாவில் நடனமாடிய விஜய்... டான்ஸைத் தவிர விஜய்க்கு ஒன்றுமே தெரியாது போல என நயினார் நாகேந்திரன் விமர்சனம்...

கூட்டணி தலைமையிடம் சில தொகுதிகளை கூடுதலாகக் கேட்பது ஒன்றும் ஜனநாய விரோத செயல் அல்ல... ஒத்திசைவுடன் கூட்டணியில் இருப்பதை விரும்புவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் வீரபாண்டியன் பேட்டி...

வேற்று மொழியை திணித்தால் என்றுமே ஏற்க மாட்டேன் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு... பராசக்தி படம் பார்த்து வேதனை அடைந்ததாகவும் கருத்து...

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு இதுவரை இல்லாத அளவாக 7 ஆயிரத்து 611 கோடி ரூபாய் ஒதுக்கீடு... சில ரயில் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு...

உலக பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் நாடுகளாக சீனாவும், இந்தியாவும் உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு... இந்தியாவின் வளர்ச்சி மீது எலான் மஸ்க்கிற்கு இருக்கும் நம்பிக்கை, எதிர்க்கட்சிகளுக்கு இல்லை எனவும் சாடல்...

நாடு முழுவதும் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக மெகா சர்வே நடத்த மத்திய அரசு திட்டம்... 2026 ஜூலை முதல் 2027 ஜூன் வரை நடத்தப்படும் என மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் தகவல்...

மத்திய அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங்

டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்தித்தப் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி... இதுபோன்ற அராஜக தேர்தல் ஆணையத்தை பார்த்ததே இல்லை என காட்டம்...

இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்ததாக மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சு... முன்னாள் ராணுவ தளபதியின் புத்தகத்தை முடக்கிவிட்டு, தேசபக்தி குறித்து பாஜக பேசுவது வேடிக்கையானது என்றும் சாடல்...

ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் கடும் அமளி... வெளிவராத புத்தகத்தை மேற்கோள் காட்டுவதா என உள்துறை அமித் ஷா கேள்வி...

இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார் அதிபர் ட்ரம்ப்... இந்திய பொருட்களுக்கான இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பு...

வெனிசுலாவிருந்து அதிக எண்ணெய் வாங்க பிரதமர் மோடி ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் அறிவிப்பு... அமெரிக்காவிடமிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பில் வர்த்தகம் மேற்கொள்ளவும் சம்மதித்ததாகவும் ட்ரம்ப் பதிவு...

அமெரிக்காவின் வரி குறைப்பு அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் மோடி கருத்து... 140 கோடி இந்திய மக்களின் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் பதிவு...

மோடி - டிரம்ப்

உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்கு அதிபர் ட்ரம்ப்பின் தலைமை முக்கியமானது... அமைதிக்கான ட்ரம்பின் முயற்சிகளை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது என்றும் பிரதமர் மோடி அறிவிப்பு...

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடந்த 68ஆவது கிராமி விருது வழங்கும் விழா... இசை விருது நிகழ்ச்சியில் மேடையை அதிர வைத்த இசைக்கலைஞர்கள்...

மாதவன், அப்பாஸ் நடிப்பில் உருவான மின்னலே திரைப்படம், திரைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவு... காதலர் தினத்தையொட்டி வரும் 13ஆம் தேதி ரி-ரிலீஸ்....