கோடை காலம் தொடங்கும் முன்பே தமிழ்நாட்டில் சுட்டெரிக்க தொடங்கிய வெயில்... ஈரோட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு...
தமிழகத்தில் வரும் 4ஆம் தேதி வரை வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை மையம் கணிப்பு... சென்னையில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தகவல்...
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவிழக்கும்... மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மார்ச் ஒன்றாம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்...
வாரத்தின் முதல் நாளே சவரனுக்கு ஆயிரத்து 440 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை... ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 860 ரூபாய்க்கு விற்பனை...
சென்னையில் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் பாதிப்பு... பணிகளை விரைந்து முடித்து ரயில்களை இயக்க கோரிக்கை...
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு... மொத்தம் 5 கோடியே 67 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக அறிவிப்பு...
தமிழக இறுதி வாக்காளர் பட்டியலில் 74 லட்சத்து 7 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்... எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பின் நீக்கப்பட்ட சுமார் 97 லட்சம் பேரில் 23 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் சேர்ப்பு...
கொளத்தூர் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி, பேருந்து நிலையம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்... கல்வி என்ற கடவுள் எல்லாவற்றையும் கொடுக்கும் என மாணவர்கள் மத்தியில் பேச்சு...
COPY, PASTE அரசியல் என்பது காலங்காலமாக அதிமுகவின் வாடிக்கை... மகளிர் உரிமைத் தொகை விவகாரத்தில் பழனிசாமி பேச்சுக்கு ஸ்டாலின் விமர்சனம்...
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்... 46 தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு ஊக்க சலுகைகள் வழங்க ஒப்புதல்...
காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆட்சியில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக இருந்ததாக விஜய் புகழாரம்.. ஸ்டாண்டப் காமெடிக்காரர் நடத்தும் மாநிலம் போல தற்போது தமிழ்நாடு உள்ளதாக விமர்சனம்...
தன் மீது அவதூறு பரப்புவது, மக்கள் மீது அவதூறு பரப்புவதற்கு இணையானது.... தவெக மேடையில் உணர்ச்சிவசப்பட்ட விஜய்....
தவெக ஆட்சிக்கு வந்தால் போதையில்லாத தமிழகம் உருவாக்கப்படும்... அதிகாரத்தில் பெண்களுக்கு சரிபாதி வாய்ப்பு என அடுக்கடுக்கான வாக்குறுதிகளை அளித்த விஜய்...
திமுக எம்பி கனிமொழியுடன் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆலோசனை.... மாநிலங்களவை சீட், உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேசியதாக விளக்கம்....
கூட்டணி ஆட்சி கோரிக்கையை கைவிட்ட காங்கிரஸ், 39 தொகுதிகளை கேட்கிறது... 25 தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமே தர முடியும் என திமுக தெரிவித்ததாக தகவல்...
தனி சின்னத்தில் போட்டியிடப்போவதாக திமுகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் மதிமுக அறிவிப்பு... மீண்டும் ராஜ்யசபா சீட் வழங்குமாறு கேட்டுள்ளதாக மதிமுக அவைத்தலைவர் அர்ஜுனராஜ் தகவல்...
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 6 தொகுதிகளை எதிர்பார்க்கும் தமிழ் மாநில காங்கிரஸ்.... எடப்பாடி கே.பழனிசாமியிடம் ஜி.கே. வாசன் கோரிக்கை வைத்ததாக தகவல்....
2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி... அனைத்து மக்களையும் விஜய் சமமாக பார்ப்பதாக கருத்து...
பாஜகவின் கைப்பாவையாக கரூர் மாவட்ட காவல் துறை செயல்படுவதாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குற்றச்சாட்டு... தன்னை ஆபாசமாக பேசிய பாஜக மாவட்டத் தலைவரைக் காப்பாற்ற போலீஸார் உறுதுணையாக இருந்ததாக சாடல்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு... சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் ராஜாஜி உருவச் சிலை திறப்பு... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏர் ஆம்புலன்ஸ் கீழே விழுந்து நொறுங்கி விபத்து... நோயாளி உட்பட 7 பேர் உயிரிழந்த சோகம்...
ஈரானிலுள்ள இந்தியர்கள் விரைந்து தாயகம் திரும்ப இந்தியா தூதரகம் அறிவுறுத்தல்... ஈரானை அமெரிக்கா எந்நேரமும் தாக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை...
பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற கோயில் வளாகத்தில் சீன ரோபோக்கள் சாசகம்... இயந்திர மனிதர்களின் தற்காப்புக் கலை சாகசங்களை கண்டுரசித்த பொதுமக்கள்...
உலகக் கோப்பை டி20 சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி... 107 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது...