திமுக அமைச்சர்களுக்கு பாஜக அழுத்தம் கொடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு... மிசா, தடாவையேப் பார்த்தவர்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம் என்றும் சூளுரை...
மதுரை வரும் பிரதமர் மோடியிடம் மெட்ரோ எப்போது என்று கேளுங்கள்... மோடியிடம் கோரிக்கையைக்கூட பழனிசாமியால் வைக்க முடியவில்லை என ஸ்டாலின் விமர்சனம்...
பாஜகவுக்கு பயந்து 5 ஆயிரம் ரூபாயை வங்கியிலிருந்து உடனே withdraw செய்த மக்கள்... கொடுப்பது திமுக; பறிப்பது பாஜக என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்...
மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடந்த காந்தியை மறவோம் நிகழ்ச்சி... ஒரே மேடையில் பங்கேற்ற திமுக கூட்டணி தலைவர்கள்...
மத அரசியல் செய்வோருக்கு காந்தியடிகளைப் பிடிக்காது... நூறு நாள் வேலைத் திட்டத்திலிருந்து காந்தியை நீக்கியவர்கள், ரூபாய் நோட்டிலிருந்தும் நீக்கக் கூடும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை...
திமுக அமைச்சர் ஒருவர் 453 நாட்கள் சிறைக்கு சென்றிருந்தார்... இன்னொரு அமைச்சர் 3 முறை அமலாக்கத் துறை சோதனைக்கு உள்ளாகி இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
அதிமுக ஆட்சிகாலத்தைவிட கூடுதல் வருமானம் வந்தாலும் திமுக அரசு கடன் வாங்குவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம்... ஹவாலா பணமாக அவை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சாடல்.
வரும் சட்டமன்றத்தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு? பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்தது திமுக...
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தது திமுக... இரண்டு இடங்கள் ஒதுக்கப்படும் என தகவல்...
தொகுதிப்பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது மதிமுக... மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைப்பு...
திமுகவிடம் 13 தொகுதிகள் அடங்கிய உத்தேச பட்டியலை தேமுதிக வழங்கியதாக தகவல்... விருதுநகர், விருத்தாசலம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட தொகுதிகளைக் கேட்க திட்டம்...
திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தியது நாம் தமிழர் கட்சி... சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் களம் காண்கிறார் சீமான்...
5 ஆயிரம் வாங்கும் அம்மா தலையில் 2 லட்சம் ரூபாய் கடன் சுமை இருப்பதாக சீமான் விமர்சனம்... கடன் வாங்கியவர்கள் நிம்மதியாக வாழ முடியுமா என்றும் கேள்வி...
திமுக - தேமுதிக கூட்டணி கொள்ளையடிப்பதற்கான கூட்டணி... தவெகவின் நிலை பரிதாபமாக இருப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்...
விஜய்யின் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் தலித் எழில்மலையின் மகள் எழில் கேத்ரின்... விடுதலைப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் பேரனும் தவெகவில் ஐக்கியம்...
விஜய்யின் தவெகவில் இணைந்த முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன்... அதிமுகவில் மூத்தவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு...
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றக்கூடிய செவிலியர்களுக்கு 182 நாட்கள் மகப்பேறு விடுப்பு... ஊதியத்துடன் விடுப்பு வழங்கும் முறைக்கு தமிழக மருத்துவத்துறை ஒப்புதல்...
எழும்பூரிலிருந்து புறப்படும் சோழன், பொதிகை, பாண்டியன் உள்ளிட்ட 8 ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நிற்கும்... இன்று முதல் ஏப்ரல் 6 வரை 2 நிமிடங்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு...
6 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்கிறது உதகை மலை ரயில் கட்டணம்... பராமரிப்பு செலவை ஈடுகட்ட தெற்கு ரயில்வே நடவடிக்கை...
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி... அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு...
திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று கனமழை... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..
தமிழகத்தில் வரும் 25ஆம் தேதி வரை மழை நீடிக்கும்... 26ஆம் தேதிக்கு பிறகு வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் தகவல்...
டெல்லியில் பிரதமர் மோடியுடன் பிரேசில் அதிபர் லுலா டா சில்வா சந்திப்பு... இரு தரப்பு வர்த்தகத்தை 20 பில்லியன் டாலர்களாக உயர்த்த இலக்கு...
மேற்குவங்கம் சட்டமன்றத்திற்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்... தேர்தல் தேதி அறிவிக்கவுள்ள நிலையில் 480 கம்பெனி துணை ராணுவ படையினர் கொல்கத்தாவிற்கு அனுப்பி வைப்பு...
மேற்குவங்கத்தை ஆளுவதற்கு பாஜக துடிப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி கடும் விமர்சனம்... அதிகாரம் மூலம் ஆட்சியை கைப்பற்றும் பாஜகவின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது எனவும் சாடல்...
டெல்லி ஏஐ உச்சிமாநாடு சர்ச்சை விவகாரம்... நாட்டில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ், பாஜக தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு...
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது 15 சதவீத வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவிப்பு... இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் புதிய முடிவு...
மார்ச் 31ஆம் தேதி சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்... இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப்போர் உள்ளிட்ட பல மோதல்கள் நீடிக்கும் நிலையில் கவனம் ஈர்க்கும் பயணம்...
ஜப்பானில் இரண்டாவது வாரமாக இன்ஃப்ளூயன்ஸா நோய் பரவல் தன்மை தீவிரம்... 35 மாகாணங்களில் இதுவரை ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று கண்டுபிடிப்பு...
உலகப்புகழ் பெற்ற நியூயார்க் டைம் ஸ்கொயர் பகுதியில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்... சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்பு...
சீனாவில் மனிதர்களுக்கு பதில் ரோபோட்டுகளை பணியில் அமர்த்தும் போக்கு அதிகரிப்பு... தேவைக்கேற்ற இயந்திர மனிதர்களை உருவாக்குவதில் நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி...
டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டத்தை தடுத்து நிறுத்திய மழை... போட்டி ரத்து செய்யப்பட்டதால், நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிக்கு தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிப்பு...
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள்... இந்திய அணியை இன்று எதிர்கொள்கிறது தென் ஆப்ரிக்கா...