cyclone and rain updates x page
தமிழ்நாடு

HEADLINES| நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்தம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை வரை!

இன்றைய தலைப்புச் செய்தியானது, வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்தம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை வரை விவரிக்கிறது.

PT WEB

வங்கக் கடலில் சென்னைக்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவிலேயே ஆழ்ந்த காற்றழுத்தம் தொடர்ந்து நீடிக்கிறது.. இன்று நள்ளிரவு எண்ணூர் - மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தொடர்ந்து மழை பெய்து வருவதை அடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே எதிரொலித்த எஸ்.ஐ.ஆர். விவகாரம்... எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் முடங்கின...

குடியரசு துணைத் தலைவராக தேர்வான பிறகு முதன்முறையாக மாநிலங்களவைக்கு தலைமை தாங்கினார் சி.பி.ராதாகிருஷ்ணன்...

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற கிளை அனுமதி... மலையில் நேரில் ஆய்வு செய்திருந்த நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு...

எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன்

சட்டமன்றத் தேர்தலையொட்டி விருப்பமனு பெறும் அமமுக... டிசம்பர் 10 முதல் 18ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும் என டிடிவிதினகரன் அறிவிப்பு...

எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல, அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை - தன்னைப் பற்றிய விமர்சனத்திற்கு செங்கோட்டையன் பதில்

இலங்கையில் டிட்வா புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 390 ஆக அதிகரிப்பு... வெள்ளம், மண் சரிவால் லட்சக்கணக்கானோர் பாதிப்பு...

இந்தோனேசியாவில் வெள்ள பாதிப்புகளால் இறந்தவர்கள் எண்ணிக்கை 604 ஆக அதிகரிப்பு... மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்...

இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குநர் ராஜ் நிதிமோரை கரம்பிடித்தார் நடிகை சமந்தா... கோவை ஈஷா மையத்தில் நடைபெற்ற திருமணத்தின் புகைப்படங்கள் வெளியானது...