தமிழ்நாடு

சாத்தூரில் மீண்டும் ரூ.33 லட்சம் சிக்கியது : அமமுக வேட்பாளர் தோட்டத்தில் பறிமுதல்

சாத்தூரில் மீண்டும் ரூ.33 லட்சம் சிக்கியது : அமமுக வேட்பாளர் தோட்டத்தில் பறிமுதல்

webteam

சாத்தூரில் இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர் தோட்டத்திலிருந்து ரூ.33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை தமிழகத்தில் நடைபெறவுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சாத்தூரில் தேர்தல் ஆணையத்தை சேர்ந்த பறக்கும் படையினர் அமமுக வேட்பாளர் சுப்ரமணியன் என்பவரது உறவினர்கள் வீட்டியில் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில் சாத்தூர் அருகே உள்ள சுப்ரமணியத்தின் மாமனார் வீட்டிலிருந்து ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அத்துடன் மகாதேவன் என்பவரை கைது செய்து ஆலங்குளம் காவல்நிலையத்தில் வைத்து விசாரித்தனர். இதையடுத்து சுப்ரமணியத்தின் மாமனார் அலுவலகத்திற்கு எதிரே உள்ள தோட்டத்திலிருந்து ரூ.33 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இதனால் மொத்தம் ரூ.43 லட்சம் சாத்தூரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.