தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனாவுக்கு இணைநோய்கள் இல்லாத 14 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனாவுக்கு இணைநோய்கள் இல்லாத 14 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு

Sinekadhara

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இணைநோய்கள் இல்லாத 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 வயதுக்கு உட்பட்ட 12 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 98 பேர் உயிரிழந்துள்ளனர். 

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 16,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர். அதில் 571 பேர் 12 வயதுக்குட்பட்ட சிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 5ஆம் தேதி 128 சிறார்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 6ஆம் நாளாக 500க்கும் மேற்பட்ட சிறார்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டில் 1219, கோவையில் 963, திருவள்ளூரில் 751, நெல்லையில் 714, தூத்துக்குடியில் 594, திருப்பூரில் 493, மதுரையில் 492, சேலத்தில் 489, திருச்சியில் 480, ஈரோடில் 457, கிருஷ்ணகிரியில் 454, காஞ்சிபுரத்தில் 443, வேலூரில், 366, ராணிப்பேட்டையில் 311, விழுப்புரத்தில் 298, தஞ்சையில் 287, நாகையில் 294, நாமக்கல்லில் 255, தேனியில் 252, குமரியில் 242, திண்டுக்கல்லில் 233, கடலூரில் 218 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.