தமிழ்நாடு

கோடம்பாக்கத்தில் 424 பேருக்கு கொரோனா : 22 இடங்களுக்குத் தடை

கோடம்பாக்கத்தில் 424 பேருக்கு கொரோனா : 22 இடங்களுக்குத் தடை

webteam

சென்னையில் அதிக கொரோனா பாதிப்பு கொண்ட பகுதியாக கோடம்பாக்கம் உருவெடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மக்கள் அச்சம் கொள்ளும் வகையில் அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கிறது. சென்னையில் இதுவரை 2644 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 316 பேர் சிகிச்சை பலன்பெற்றுக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 23 பேர் இயற்கை எய்தியுள்ளனர். தற்போது 2255 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் அதிகபட்ச பாதிப்பு கொண்ட பகுதிகளாகத் திரு.வி.க. நகர் மற்றும் ராயபுரம் ஆகியவை இருந்தன. திரு.வி.க நகரில் இதுவரை 391 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ராயபுரத்தில் 313 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த இரண்டு பகுதிகளை விட கோடம்பாக்கம் அதிக பாதிப்புக்களைக் கொண்ட பகுதியாக மாறியுள்ளது. 

கோடம்பாக்கத்தில் இதுவரை 424 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அங்கு 22 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒலிபெருக்கி மூலம் மாநகராட்சி ஊழியர்கள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.