தேமுதிக சார்பில் 300க்கும் மேற்பட்டோர் விருப்பமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. அதன்படி கடந்த 25 ஆம் தேதி முதல், தேமுதிக விருப்பமனு பெறப்பட்டு வருகிறது. முதல்நாளில் 185 பேர் வரை விருப்பமனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் விருப்பமனுவை தாக்கல் செய்துள்ளனர்.