திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பாதூர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் அவதிபட்டு வருகின்றனர்.
மருத்துவக் குழுவினர் கிராமத்தில் முகாமிட்டு மாத்திரைகளை மட்டும் வழங்கியதாக கூறப்படுகிறது. மருத்துவ பரிசோதனை எதுவும் செய்யவில்லை என கிராம பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு கிராமமே காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவக்குழு பாதூர் கிராமத்தில் தொடர்ந்து முகாமிட்டு சிகிச்சை அளிக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.