தமிழ்நாடு

தபால் ஓட்டுகளில் இவ்வளவு செல்லாத ஓட்டுகளா..?

தபால் ஓட்டுகளில் இவ்வளவு செல்லாத ஓட்டுகளா..?

Rasus

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில பகுதிகளில் தபால் ஓட்டுகளில் அதிகப்படியான செல்லா ஓட்டுகள் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில் முதற்கட்டமாக 60 தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டதில், உரிய ஆவணங்களை முறையாக வைக்காததால் 58 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான 118 தபால் வாக்குகளில் 96 தபால் வாக்குகள் செல்லாதவை என
அறிவிக்கப்பட்டுள்ளது 22 வாக்குகள் மட்டுமே செல்லத்தக்க வாக்குகளாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லை என மற்ற வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு, காலை உணவு வழங்கவில்லை எனக்கூறி வாக்கு எண்ணும் பணி பல இடங்களில் தாமதமாகியுள்ளது.