சென்னையில் 6 ஆயிரத்து 402 கோடி ரூபாய் செலவில், மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. 43 புள்ளி 48 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரு வழித்தடங்களில் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பூவிருந்தவல்லி முதல் கத்திப்பாரா வரையிலான இணைப்போடு, போரூர் முதல் வடபழனி வரை முதல் வழித்தடத்திலும், வண்டலூர் முதல் வேளச்சேரி வரை 2வது வழித்தடத்திலும் மோனோ ரயில் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பேட்டரி பஸ்கள்
சென்னையில் விரைவில் பேட்டரிகளில் இயங்கும் பேருந்துகள் இயக்கப்படுமென போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டசபையில் இன்று தெரிவித்தார். போக்குவரத்து மானியக்கோரிக்கை மீது பேசிய அவர், மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய வாகன கட்டுப்பாட்டுச் சட்டத்தை தமிழக அரசு முழுமையாக எதிர்ப்பதாகவும், அதில் திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசை முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருதாகவும் குறிப்பிட்டார்.