பெரம்பலூர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி pt
தமிழ்நாடு

பெரம்பலூர் | குடிநீர் தேக்க தொட்டியில் அழுகிய நிலையில் கிடந்த குரங்கு!

பெரம்பலூர் அருகே மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் அழுகிய நிலையில் குரங்கு கிடந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

PT WEB

பெரம்பலூரை அடுத்த அம்மாபாளையம் கிராமத்தில் வன்னி மலை கால்நடை மருத்துவமனை அருகில் வசிக்கும் பகுதியில், 15ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள சுமார் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

இந்நிலையில் இன்று விநியோகம் ஆன குடிநீரில் புழுக்களுடன் வெளியேறி துர் நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த சிலர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி பார்த்த போது தொட்டியில் இறந்து அழுகிய நிலையில் குரங்கு ஒன்று மிதப்பது தெரியவந்துள்ளது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் அம்மாபாளையம் ஊராட்சி செயலர் முருகேசனிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி செயலர் முருகேசன் ஊராட்சி பணியாளர்கள் உதவியுடன் மிதந்து கொண்டிருந்த குரங்கினை அகற்றும் பணியில் ஈடுபட்டார். மேலும் அப்பகுதி மக்களுக்கு வேறு பகுதியிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை முறையாக பராமரிக்காமல் போனதே குரங்கு இறந்து மிதந்திருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது போன்று இனி இவ்வாறு நடக்காமல் இருக்க அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.