வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து கண்காணிப்பு அதிகாரிகளாக 12 மாவட்டங்களுக்கு 12 பேரை நியமித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, மாநிலம் முழுவதும் மழை பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணிக்க, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய 12 பேர் கொண்ட சிறப்புக் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்துக்கு மரு.கே.பி.கார்த்திகேயன், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு கே.எஸ்.கந்தசாமி,செங்கல்பட்டு மாவட்டத்துக்கு கிராந்திகுமார் பாடி, விழுப்புரம் மாவட்டத்துக்கு எஸ்.ஏ.ராமன், கடலூர் மாவட்டத்துக்கு டி.மோகன், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு கவிதாராமு நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்துக்கு டி.ஆனந்த், நாகப்பட்டினத்துக்கு ஏ.அண்ணாதுரை, தஞ்சைக்கு எச்.கிருஷ்ணனுன்னி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் கள்ளக்குறிச்சிக்கு பி.ஸ்ரீ.வெங்கடபிரியா, அரியலூருக்கு எம்.விஜயலடசுமி, பெரம்பலூருக்கு எம்.லட்சுமி ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தஅதிகாரிகள், மழை அதிகம் எதிர்பார்க்கப்படும் மாவட்டங்களில் முகாமிட்டு, வெள்ளத் தடுப்புப் பணிகள்,பாதிப்பு மேலாண்மை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, நிலைமையைத் தொடர்ந்து அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள்.