தமிழ்நாடு

கீரிப்பிள்ளை முடியில் செய்யப்பட்ட பிரஷ்கள் பறிமுதல்

கீரிப்பிள்ளை முடியில் செய்யப்பட்ட பிரஷ்கள் பறிமுதல்

webteam

கீரிப்பிள்ளை முடியிலிருந்து தயாரிக்கப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரஷ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை டவுன் ஹால் பகுதியிலுள்ள நோட்டு, புத்தகம், பென்சில்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. அந்த கடையில் மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட வனத்துறையினர் சோதனை நடத்தினர். அதில், கீரிப்பிள்ளை முடியிலிருந்து தயாரிக்கப்பட்ட 25 ஆயிரம் பிரஷ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிரஷ் தயாரிப்பதற்காக கீரிப்பிள்ளை கொல்லப்படுவதால் அந்த வகை பிரஷ்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி சட்டவிரோதமாக கீரிப்பிள்ளை முடியில் செய்யப்பட்ட பிரஷ் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பல்வேறு
பகுதிகளிலுள்ள கடைகளிலும் சோதனை தொடர்கிறது.