கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பூனப்பள்ளி சோதனைச்சாவடியில் கர்நாடக மாநிலத்திலிருந்து உரிய ஆவணங்களின்றி எடுத்துச் வரப்பட்ட ஆனந்த் என்பவரிடமிருந்து ரூ.1.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பூனப்பள்ளி சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் கர்நாடக மாநிலம் அனேகால் தாலுகா சின்ன ஆக்டே கிராமத்தை சேர்ந்த ஆனந்த என்ற விவசாயி பசுமைக்குடில்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க அந்த பணத்தைக் கொண்டுவந்ததாக கூறப்படுகிறது.
இருந்தபோதிலும் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 600 எடுத்து சென்றதால், அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஓசூர் வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மீண்டும் ஆவணங்கள் கொடுத்துவிட்டு பெற்றுச் செல்லுமாறு தேர்தல் பறக்கும் படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.