தமிழ்நாடு

தமிழில் மோடி, ஆங்கிலத்தில் எடப்பாடி

தமிழில் மோடி, ஆங்கிலத்தில் எடப்பாடி

Rasus

தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி ஆங்கிலத்தில் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது 63வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். அவரது வாழ்த்துச் செய்தியில், நல்ல ஆரோக்கியம்,மகிழ்ச்சி தந்து மக்களுக்கு சேவை செய்ய இறைவன் ஆசீர்வதிக்கட்டும் என தமிழில் வாழ்த்து தெரிவித்திருந்தார். தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிச்சாமி, நன்றி தெரிவித்து ஆங்கிலத்தில் கடிதம் அனுப்பியுள்ளார்.