தமிழ்நாடு

“எங்கு சென்றாலும் தாய் நாட்டை மறக்காதீர்கள்” - மாணவர்களுக்கு மோடி அறிவுறுத்தல்

webteam

எங்கு வேலை செய்தாலும் எங்கு வாழ்ந்தாலும் தாய் நாட்டை மறக்காதீர்கள் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். 

சென்னை ஐஐடியின் 56 ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய பின் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது , “ரோபோட்டிக் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப பிரிவுகளில் மாணவர்கள் கவனம் செலுத்துகின்றனர். உலகின் டாப் 3 ஸ்டார்ட் அப் கண்டுபிடிப்பு நாடுகளில் இந்தியா இடம்பெற்றுள்ளது. வாகனம் சுகாதாரம் உள்ளிட்ட முக்கியத்துறைகளில் ஸ்டார்ட் அப் தொழில்கள் அதிகரித்து வருகின்றன. புதுமைக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் ஐஐடி சென்னை சிறப்பான இடம் வகிக்கிறது. 

கடின உழைப்பால் முடியாததையும் முடியக்கூடியதாக மாற்றும் ஆற்றல் மாணவர்களுக்கு உண்டு. ஓய்வு, உறக்கம் மற்றும் உணவின்றி கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். முயற்சி, திறமை, அர்பணிப்பு உணர்வு கொண்டவர்களுக்கு சரியான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. தண்ணீரை சுத்தகரித்து மறு உபயோகப்படுத்தும்  வழிகளை கண்டறிவது அவசியம். வாழ்க்கை முறை நோய்கள்தான் எதிர்கால ஆரோக்கிய குறைப்பாட்டை ஏற்படுத்துவதாக உள்ளன. எங்கு வேலை செய்தாலும் எங்கு வாழ்ந்தாலும் தாய் நாட்டை மறக்காதீர்கள்.” எனத் தெரிவித்தார்.