தமிழ்நாடு

பக்கோடா விவகாரம்: மோடியை வாழ்த்தி மேட்டூரில் பேனர்

பக்கோடா விவகாரம்: மோடியை வாழ்த்தி மேட்டூரில் பேனர்

webteam

மேட்டூரில் பிரதமர் மோடியை விமர்சித்து பேனர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்திய தொலைகாட்சி பேட்டி ஒன்றில், தினமும் ஒருவர் பக்கோடா விற்று, வீட்டுக்கு 200 ரூபாய் கொண்டு செல்வதை வேலை வாய்ப்பு என்று எடுத்துக் கொள்ள முடியாதா என கேட்டிருந்தார். நாடாளுமன்றத்தில் பேசிய அமித்ஷாவும் பக்கோடா விற்பது ஒன்றும் கேவலமான செயல் அல்ல என்றும் எந்த வேலைக்கும் செல்லாமல், செய்யாமல் இருப்பதைக் காட்டிலும் பக்கோடா விற்பது மேல் என்று கூறியிருந்தார். பக்கோடா என்ற ஒற்றை சொல் போதாதா சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பிரதமரையும், பாஜக தலைவர்களையும் கேலி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மேட்டூரில் இந்த பக்கோடா விவகாரம் தொடர்பாக பிரமரை மோடியை விமர்சித்து பேனர் வைக்கப்பட்டது. இதில்  “பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு படித்தவர்களை பக்கோடா விற்று பிழைக்கலாம் என்று வாழ வழி காட்டிய நரேந்திர மோடி வாழ்க பல்லாண்டு” என வாழ்த்தி பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.