வானிலை ஆய்வு மையம் முகநூல்
தமிழ்நாடு

தமிழகத்தில் வரும் 2ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னையில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Vaijayanthi S

தமிழகத்தில் வரும் 2ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை

மேலும் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஒடிசா கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றிருப்பதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் ஒடிசாவை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது என்று வானிலை மையம் கூறியிருக்கிறது.