தமிழ்நாடு

காய்கறி, பழ வியாபாரிகள் வாகனத்தை காவல்துறை தடுத்தால் புகாரளிக்கலாம்

நிவேதா ஜெகராஜா

தமிழகத்தில் முழு முடக்கம் அமலிலுள்ள நிலையில், காய்கறி – பழ வியாபாரிகளை காவல்துறையினர் தடுத்தி நிறுத்தினால், அவர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு அதை புகாராக தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு நேற்றைய தினம் தொடங்கப்பட்ட நிலையில், நேற்று ஒரு நாளில் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றத்துக்காக சென்னையில் மட்டும் 2,409 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஊரடங்கு விதிமுறைகள் மீறியது தொடர்பாக 1,805 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்தது.

இப்படியான சூழலில்தான், சென்னை மாநகராட்சி சார்பில் ‘காவல்துறையினர் தடுத்து நிறுத்தினால் காய்கறி, பழ வியாபாரிகள் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தரலாம்’ என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான உதவி எண்களாக 044-4568 0200, 94999 32899 என்ற எண்களில் மூன்று சக்கர வாகனம் – தள்ளுவண்டி வியாபாரிகள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.