தமிழ்நாடு

விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் மின் இணைப்பு!

விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் மின் இணைப்பு!

webteam

விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் புதிய மின் இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

மின்வாரியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, மின்துறை அமைச்சர் பேசியதாவது: தமிழகத்தில் மின் இணைப்பு பெற நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புக்காக இனி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் புதிய மின் இணைப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் தெரிவித்தார். மேலும், மின்கட்டணம் செலுத்த விரைவில் மொபைல் ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.