தமிழ்நாடு

“நேர்மை அரசியலுக்கு நன்கொடை தாரீர்”- கமல்ஹாசன் வேண்டுகோள்

“நேர்மை அரசியலுக்கு நன்கொடை தாரீர்”- கமல்ஹாசன் வேண்டுகோள்

நிவேதா ஜெகராஜா

மக்கள் நீதி மய்யத்திற்கு நன்கொடை வழங்குமாறு பொதுமக்களிடம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், அதில் “மக்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த மக்களிடமே உரிமையுடன் கொடை கேட்கிறோம். அடுத்த தலைமுறை நல்ல சூழலில் வாழ்வதற்கும், நேர்மையான அரசும், நல்ல நிர்வாகமும் அமைவதற்கு இந்த பங்களிப்பு ஒரு முதலீடு. இங்கே விதைத்ததை மக்களால் நிச்சயம் அறுவடை செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார். நேர்மையான அரசியலுக்கு நன்கொடை தாருங்கள் என்ற ஹேஷ்டேக் மூலம் இந்த கோரிக்கையை கமல் ஹாசன் விடுத்துள்ளார்.