தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - சென்னையில் பரப்புரையை தொடங்கினார் மநீம தலைவர் கமல்ஹாசன்

Sinekadhara

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையை மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமலஹாசன் தொடங்கினார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  ஈடுபட்டார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்காக மந்தவெளியில் உள்ள விசாலாட்சி தோட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வருகை தந்தார். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி;j தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்கு சேகரிக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள 123-வது வார்டில் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் மாலாவை ஆதரித்து கமலஹாசன் வீடு வீடாக பரப்புரையில் ஈடுபட்டார். தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் சார்பில் 1338 பேர் தேர்தலில் போட்டியிட உள்ளனர். சென்னையில் மட்டும் 182 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தனித்து போட்டியிட உள்ள மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. விசாலாட்சி தோட்ட பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்பகுதி பெண்கள் சிலர் கமல்ஹாசனுக்கு ஆரத்தி எடுத்தனர். மக்களிடம் டார்ச்லைட் சின்னத்தில் வாக்களிக்குமாறு கமலஹாசன் கோரிக்கையை வைத்தார்.

இன்று மதியம் சென்னை வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் கலந்துரையாடவுள்ள கமல்ஹாசன் வரும் நாட்களில் காணொளி முறையிலும் நேரடியாகவும் பரப்புரையில் ஈடுபடுவார் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.