சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு மசோதாவை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்த கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் பேரவை உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்கும் மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதா நிறைவேறினால் சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் 55 ஆயிரம் ரூபாயில் இருந்து 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும். மசோதா நிறைவேற்றப்பட்டால் அரியர்ஸ் தொகையுடன் சேர்த்து சட்டமன்ற உறுப்பினர்கள் தலா 3லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுவர். முன்னாள் எம்எல்ஏக்கள் 20ஆயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெறுவர்.